Posts

Showing posts from February, 2012

கைத்தொலைபேசிக்கான இணையதளத்தை வடிவமைப்பதற்கு

கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு தகுந்தபடி அழகான மொபைல் வலைதளம் ஓன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையுமின்றி இலவசமாக உருவாக்கலாம்.
கைத்தொலைபேசிகள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் என்று ஆகிவிட்டது. மின்னஞ்சல் படிப்பதில் தொடங்கி இணையதளம் பார்ப்பது வரை அத்தனையும் நாம் கைத்தொலைபேசி மூலமே செய்யலாம்.
இப்படி இருக்கும் போது நம் இணையதளமும் கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்படி உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Go mobile என்ற பொத்தானை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச கணக்கு உருவாக்கி கொண்டு இணையதளம் உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட Template(ஏற்கனவே வடிவமைப்பு செய்யப்பட்டவை) பல இருக்கிறது.
இதிலிருந்து நமக்கு வேண்டிய டிசைனை தேர்ந்தெடுத்து எளிதாக சில சொடுக்குகளின் மூலம் மாற்ற வேண்டியதை மாற்றி புதிதாக ஒரு மொபைல் இணையதளம் உருவாக்கலாம்.
எல்லாம் உருவாக்கிய பின் அவர்களே ஒரு இணையதள முகவரியும் கொடுக்கின்றனர். நாம் நம் தளத்தில் கைத்தொலைபேசி வாசகர்கள் இங்கே சொடுக்க என்று ஒரு இணைப்பு வைத்து அந்த முகவரியை கொடுக்கலாம், கைத்தொலைபேசியிலும் நம்…

GSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்

அயல் நாடுகளில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் சிஸ்டம் தான் GSM.
இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ என்ற மொபைல் சிஸ்டம் இதைக் காட்டிலும் சிறப்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும் ஜி.எஸ்.எம் சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது.
இந்தியாவில் இரண்டு சிஸ்டங் களும் இயங்குகின்றன. ஆனால் ஜி.எஸ்.எம் வகை தான் அதிக வாடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
Line In: கணணி அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஓடியோ சாதனத்தை இணைக்கும் வழி.
Back up Domain Controller: விண்டோஸ் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கணணிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணணிகள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது.
அவை செயல் இழக்கையில் இந்த பக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன.
இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
Event Handler: ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்தி விடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறதல்லவா. …

GPRS பற்றிய சில தகவல்கள்

GPRS  என்பது ஒரு மொபைல் டேட்டா சர்வீஸ் வகையாகும். 2ஜி மற்றும் 3ஜி வகை நெட்வொர்க் இணைப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
தகவல் பரிமாற்றத்தினை இது தருகிறது. நொடிக்கு 56 கிலோ பிட்ஸ் முதல் 114 கிலோ பிட்ஸ் வரையிலான வேகத்தில் இதன் மூலம் தகவல்களினைப் பெறலாம்
தகவல்களினைப் பெற உங்கள் மொபைல் போனில் உள்ள பிரவுசர் இணைய இணைப்பில் இருக்க வேண்டும்.
EDGE Enhanced Data rates for GSM Evolution: இதனை எட்ஜ் எனவும் அழைக்கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஜி.பி.ஆர்.எஸ் வகையினைக் காட்டிலும் சற்று மேம்பட்டதாகும்.
அதனைக் காட்டிலும் சற்று வேகம் அதிகமான பிரவுசிங் மற்றும் தகவல் பரிமாற்றத்தைத் தரும்.

AGPS பற்றிய சில தகவல்கள்

AGPS என்பது Assisted Global Positioning System என்பதாகும்.  இந்த வசதியானது கைத்தொலைபேசியில் தகவல்களை பெறுவதற்கு பயன்படுகிறது.
உங்கள் கைத்தொலைபேசியில் இணைய இணைப்பு வசதி இருந்து, அதனை இயக்கும் வசதியை உங்களுக்கு போனுக்கு இணைப்பு தரும் நிறுவனத்திடம் நீங்கள் பெற்றிருந்து அதனை இயக்கினால் சாட்டலைட் டிலிருந்து நிறுவனத்தின் சர்வர் வழியே உங்கள் கைத்தொலைபேசியில் தகவல்களைப் பெறலாம்.
இணையப் பக்கங்களைப் பார்வையிடலாம். ஜி.பி.எஸ். வசதி கொண்ட கைத்தொலைபேசிகளில் இந்த AGPS உதவி இல்லாமல் தகவல்களை பெறலாம். ஆனால் அதற்கு நேரம் மிக மிக அதிகமாகும்.
அந்த சிரமத்தை இந்த தொழில் நுட்பம் குறைக்கிறது. ஆனால் உங்கள் கைத்தொலைபேசியில் இன்டர்நெட் தொடர்பு வசதி இருப்பது கட்டாயமாகும்.

இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்

அறிவுத்தேடலின் பிரமாண்டமான பொக்கிஸமாகவும், திறந்த வெளியாகவும் காணப்படும் விக்கிபீடியா தளமானது உலகில் அறிவுத்தேடலுடன் பரந்து வாழும் மக்கள் மத்தியில் மிக பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இதனால் அலெக்ஸா வரிசைப்படுத்தலிலும் மிகச்சிறந்த இடத்தில் காணப்படுகின்றது. இத்தளத்தில் ஆங்கிலத்தில் மட்டும் 3.8 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகள் காணப்படுவதும் ஒரு சிறப்பம்சமாகும்.
எனினும் இப்பயனுள்ள தளத்தை இணைய இணைப்பு காணப்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே பயன்படுத்தக்கூடியவாறு காணப்பட்டமை ஒரு எதிர் விளைவாகவே காணப்பட்டது. இதனால் இணைய வசதியற்ற பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைய முடியாத சூழ்நிலை காணப்பட்டது.
ஆனால் தற்போது அதற்கும் தீர்வு கிடைத்துவிட்து. அதாவது இணைய இணைப்பு அற்ற நிலையில் விண்டோஸ் இயங்குதளத்தை கொண்ட உங்கள் செல்போன்களிலும் இதற்கான மென்பொருளை நிறுவி பயன்படுத்த முடியும்.
"பொக்கட் விக்கிபீடியா" என அழைக்கப்படும் இந்த மென்பொருளில் 24,000 படங்கள் காணப்படுவதுடன் 14 மில்லியன் வரையிலான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. 175MB அளவைக்கொண்ட இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களி…

புற்றுநோயை கட்டுப்படுத்தும் திராட்சை

திராட்சை விதைகளில் உள்ள சத்துகள், புற்றுநோய் கிருமிகளை விரட்டி நோயை கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை இவை பாதிக்காது என்பது கூடுதல் சிறப்பு. கொலராடோ பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையில் இணைந்து புற்றுநோய்க்கான தீர்வு குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதில்தான் திராட்சை விதையின் மகத்துவம் தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து ராஜேஷ் கூறியதாவது: உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தீர்வுக்கான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன.
சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது. பொதுவாக அனைத்து வகையான புற்றுநோய் கிருமிகளுமே மிக வேகமாக பரவக்கூடியவை.
இவற்றை கட்டுப்படுத்த கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் கிருமிகள் பன்மடங்கு பெருகி உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்து உள்ளது. கீமோதெரபி உட்பட முறையில்…

நீரிழிவு, இருதய நோய்களை தவிர்க்கும் தேநீர்

தற்காலத்தில் உண்டாகும் பலவிதமான நோய்களுக்கு மருந்து வகைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலும், பருகும் பானங்களிலும் குறித்த சில நோய்களுக்கான நிவாரணிகள் காணப்படுகின்றன.
அதனடிப்படையில் தினந்தோறும் மூன்று கப் பால் கலக்காத தேநீர் பருகி வருவதன் மூலம் இருதய நோய்கள், நீரிழிவு நோய்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தேநீரானது தீங்கு விளைவிக்கும் கொலஸ்திரோலின் அளவையும், குருதியிலுள்ள சீனியின் அளவையும் குறைப்பதனால் மேற்குறித்த பிரச்சினைகள் பற்றி அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை.
அத்துடன் தேநீரில் காணப்படும் பிறிதொரு உள்ளடக்கமாக காணப்படும் பிளேவனொயிட்(flavonoid) எனும் பதார்த்தம் இதய நாளங்களில் ஏற்படும் கோளாறுகளை கட்டுப்படுத்த உதவுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் தேநீரின் மூலம் உடலுக்கு 150-200mg வரையான பிளேவனொயிட் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடியோ கோப்புகளை மட்டும் பிரித்தெடுப்பதற்கு

Image
நீங்கள் விரும்பும் பாடல்களில் உள்ள ஓடியோவை மட்டும் தனியாக கோப்புகளாக பிரித்தெடுக்கலாம்.
இதற்கு Helium Audio Splitter என்ற மென்பொருள் உதவி புரிகிறது. இந்த மென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது.
இதனை பயன்படுத்தி ஓடியோ கோப்பை மட்டும் எளிதாக பிரித்தெடுக்கலாம். இது MP3, wave, WMA, OGG வோர்பிஸ், MP4, AAC, wavpack போன்ற போர்மட்டுகளை சப்போர்ட் செய்யக்கூடியது.
இந்த மென்பொருள் விண்டோஸ், விண்டோஸ் 2000, விஸ்டோ இயங்குதளங்களில் செயல்படக்கூடியது.
தரவிறக்க சுட்டி

மற்ற நபர்களிடமிருந்து கணணியை பாதுகாக்க

உங்கள் கணணி நீங்கள் மட்டுமின்றி பலரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? இதனால் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்களை மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா?
சில புரோகிராம்களை அவர்கள் திறந்து இயக்கக் கூடாது எனத் திட்டமிடுகிறீர்களா? விண்டோஸ் 7 இயங்குதளம் இதற்கான வழிகளைத் தருகிறது.
இதற்கு ஒரு தீர்வாக குறிப்பிட்ட புரோகிராம்களை மட்டுமே மற்றவர்கள் கையாளும் வகையில் அமைக்கலாம். (உங்களிடம் இருப்பது விண்டோஸ் 7 ஹோம் பதிப்பு என்றால் இதனைச் செயல்படுத்த முடியாது.)
விண்டோஸ் ஸ்டார்ட் மெனு செல்லுங்கள். அங்கு gpedit.msc என டைப் செய்திடவும். பின்னர் Enter அழுத்துங்கள்.
இங்கு கிடைக்கும் User Configuration பட்டியில் Administrative Templates என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது ஒரு புதிய பட்டியல் கிடைக்கும். இதில் System என்ற கோப்பறையில் கிளிக் செய்திடவும்.
இனி வலது பக்கம் இருக்கும் பிரிவில் கீழாகச் சென்று Run only specified Windows applications என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு Enabled என்று உள்ள ரேடியோ பட்டனில் செக் செய்திடவும். அடுத்து ஆப்ஷன் தலைப்பில் உள்ள Show…

மென்பொருட்களின் சீரியல் எண்களை அறிந்து கொள்வதற்கு

உங்கள் கணணியில் பல்வேறான மென்பொருட்களை நிறுவி பயன்படுத்துவீர்கள். அதில் இலவச மற்றும் கட்டண மென்பொருட்களும் அடங்கும்.
கட்டணம் செலுத்தி வாங்கும் மென்பொருட்களுக்கு(Licensed softwares) வைத்திருப்பீர்கள். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும் அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்கள் அனுப்பப்படும்.
நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள். வைரஸ் காரணமாக கணணி செயலிழக்கும் போதோ அல்லது கணணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட்(Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும்.
அப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண்(Serial No) எங்கே என்று தெரியாமல் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler.
இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம் அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இந…

அனுப்பிய மெயிலை நிறுத்துவதற்கு கூகுளின் புதிய வசதி

மெயில் சர்வர்களில், மின்னஞ்சல் செய்தி ஒன்றை அனுப்ப கட்டளை கொடுத்தவுடன் அந்த மெயில் உடனடியாக அனுப்பப்படும் நபரின் இன் பாக்ஸுக்கு அந்த மின்னஞ்சல் சென்றுவிடும்.
இணையப் பழக்கவழக்கங்களில் பல வகை மாற்றங்களைக் கொண்டு வரும் கூகுள் நிறுவனம், இதிலும் ஒரு புதிய வசதியைத் ஏற்படுத்தியுள்ளது. நாம் அனுப்பிய மெயிலைத் திரும்பப் பெற எண்ணினால், உடனடியாக அதன் சேவையை நிறுத்திவிடலாம்.
இந்த வசதியைப் பயன்படுத்த, மெயிலை அனுப்பிய சில நொடிகளில் செயல்படுத்த வேண்டும். அதிக பட்சம் 30 நொடிகளில் இதனை மேற்கொள்ள வேண்டும். இதற்கு Undo Send என்ற பட்டனை அழுத்த வேண்டும். இந்த கட்டளை, மெயிலைப் பெறுபவரின் இன் பாக்ஸில் இருந்து அழிப்பதன் மூலம் நடைபெறுவதில்லை.
மெயில்கள் வரிசையில் நிற்கும்போது அவை தடுக்கப்படுகின்றன. மீண்டும் அனுப்பியவரே, Undo Send என்பதனை நீக்கினால் தான் அந்த மெயில் அனுப்பப்படும். இதனைச் சோதனை செய்திட, நீங்களே உங்கள் இமெயில் முகவரிக்கு ஒரு மெயிலை அனுப்பி, உடனேயே கேன்சல் செய்து பார்க்கலாம். இந்த வசதி வெப் அடிப்படையில் இயங்கும் ஜிமெயில் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது.
இந்த வசதியைப் பெற முதலில் இதனை இயக…

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.
 உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை. ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது.
க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.
மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.
சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரம…

டைனமிக் லிங்க் லைப்ரேரி(dllfiles)

டைனமிக் லிங்க் லைப்ரேரி
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை.
கம்ப்யூட்டர் இயக்கம் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிந்து கொள்கையில் டி.எல்.எல். பைல்ஸ் என ஒரு சொல் தொடரை அடிக்கடி நாம் கேள்விப்படுகிறோம். இது டைனமிக் லிங்க் லைப்ரேரி (Dynamic Link Library) என்பதைக் குறிக்கிறது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்த அதன் இயக்கத்திற்கு அடிப்படையில் தேவையான பைல்கள் இவை. இவை மற்ற பைல்களிலிருந்து தனியே தெரிந்தாலும் பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் இவை என்ன என்றோ அல்லது இவை இல்லை என்றால் என்ன செய்திடும் என்றோ கவலைப் படுவதில்லை. இவை எதற்காக எவ்வாறு செயல்படுகின்றன என்று தெரிந்து கொண்டால் கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த மர்மங்களிலிருந்து நிச்சயம் விடுபடலாம்.
இந்த பைல்களின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளின் தன்மை குறித்து புரோகிராமர்கள் தான் கட்டாயம் அறிந்து கொண்டிருக்க வேண்டும். இருப்பினும் இவை மிக முக்கியமான வகை பைல்கள் என்பதால் இவை குறித்து நாம் நிச்சயம் ஓரளவிற்காவது அறிந்திருக்க வேண்டும். எனவே கீழே கம்ப்யூட்டர் …

RAM அண்ட் ROM வித்தியாசம்

RAM அண்ட் ROM வித்தியாசம் தெரியுமா?கம்ப்யூட்டரைப்பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன் பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்த மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 10…

கம்ப்யூட்டரில் மின்சார சிக்கனம்

1.மானிட்டர் ஸ்கிரீனின் பிரைட்னஸ் குறைத்து வைத்துப் பயன்படுத்தலாம்.
2. கம்ப்யூட்டர் பயன்படுத்தி முடித்தபின்னர் உடனே அதற்கு செல்லும் மின் சக்தியை நிறுத்தி ஆப் செய்திடவும். தேவையில்லாமல் ஸ்லீப் மோடில் வைக்க வேண்டாம்.
3. இன்னும் பழைய சி.ஆர்.டி. (டிவிக்களில் பயன்படுத்தப்படும் கதோட் ரே ட்யூப் ) கொண்ட மானிட்டர் பயன்படுத்துவதாக இருந்தால் உடனே எல்.சி.டி. மானிட்டருக்கு மாறவும். ஏனென்றால் எல்.சி.டி மானிட்டர் சி.ஆர்.டி. மானிட்டரின் மின் சக்தியில் மூன்றில் ஒரு பங்கு மின் சக்தியையே பயன்படுத்துகிறது. அது மட்டுமின்றி கண்களுக்கும் அதிக வேலைப் பளுவைத் தருவதில்லை. 4. ஸ்கிரீன் சேவரை எல்லாம் நிறுத்தி விடுங்கள். இவை மானிட்டருக்கான மின் சக்தியைச் சாப்பிடும் சமாச்சாரங்களாகும். ஒரே திரைக் காட்சி உறைய வைப்பதைத் தடுக்கவே ஸ்கிரீன் சேவர்கள் வந்தன. ஆனால் இப்போது அது போல உறையும் தன்மைகள் எல்லாம் கிடையாது.
5. கோடை அல்லது குளிர் கால விடுமுறையின் போது வெகு நாட்கள் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால் முழுமையாக மின் சக்தி இணைப்பைத் தரும் ப்ளக் இணைப்புகளை நீக்கிவிடவும்.
6. புதிய கம்ப்யூட்டர் வாங்குக…

லேப்டாப்

Image
லேப்டாப் கம்ப்யூட்டர் இன்று பலரின் விசுவாசத் தொண்டனாக இயங்கி வருகிறது. சிலருக்கு அதுவே எஜமானனாகவும் உள்ளது. எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இருப்பதால், இதனைப் பயன்படுத்து வோருக்கு நடமாடும் அலுவலகமாகவும் இது செயல்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்து வருவதனாலும், வசதிகள் கூடுதலாகக் கிடைப்பதனாலும் இன்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் இடத்தை லேப்டாப் கம்ப்யூட்டர் பிடித்து வருகிறது. இப்போது அரசே மாணவர்களுக்கு இலவசமாக இதனை வழங்கி வருவதால், அடுத்த சந்ததியினர் லேப்டாப் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்தக் கூடிய சூழ்நிலை எழுந்து வருகிறது. லேப்டாப் கம்ப்யூட்டருக்குப் புதியதாக அறிமுகமாகும் பலர் சின்ன சின்ன பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். அவற்றை எப்படி சந்தித்து, சமாளித்து, லேப்டாப் கம்ப்யூட்டரை நம் வசமாக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.
முதலில் தேவையில்லாத சாப்ட்வேர் தொகுப்புகளை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குங்கள். இவை வெளிப்படையாக இயங்கவில்லை என்றாலும், பின்னணியில் இயங்கி, உங்கள் லேப்டாப்பின் இயங்கும் திறனைத் தாமதப் படுத்தும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எக்ஸ்பி என்றால் கண்ட்ரோல் பேனல…

free-சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள்எண்ணெய் குறைவான உணவு வகைகள் தயாரிப்பு முறைகள்20வகையான சைடு டிஷ் தயாரிப்பு முறைகள்20வகையான டிபன் தயாரிப்பு முறைகள்30வகையான தோசை தயாரிப்பு முறைகள்30வகையான இட்லி தயாரிப்பு முறைகள்30வகையான பஜ்ஜி,பக்கோடா தயாரிப்பு30வகையான சப்பாத்தி வகைகள் தயாரிப்பு முறைகள்30வகையான பருப்பு டிஷ் தயாரிப்பு முறைகள்30வகையான ஜஸ்கீரிம் தயாரிப்பு முறைகள்30வகையான கிழங்கு டிஷ் தயாரிப்பு முறைகள்30வகையான பருப்பு மசியல் டிஷ் தயாரிப்பு முறைகள்30வகையான பாயாசம் தயாரிப்பு முறைகள்30வகையான பொரியல் தயாரிப்பு முறைகள்30வகையான சேமியா தயாரிப்பு முறைகள்30வகையான கூட்டு தயாரிப்பு முறைகள்30வகையான பச்சடி தயாரிப்பு முறைகள்30வகையான டிபன் தயாரிப்பு முறைகள்பொதுவான சமையல் குறிப்புகள்-1பொதுவான சமையல் குறிப்புகள்-2போண்டா- வடை செய்முறைகள்இனிப்பு உருண்டை வகைகள் செய்முறைகள்பழங்களில் பலகாரங்கள் செய்முறைகள்சத்தான உணவு வகைகள் செய்முறைகள்கூட்டு-பொரியல் வகைகள் செய்முறைகள்குழம்பு  கிரேவி வகைகள் செய்முறைகள்மலேசியன் உணவு வகைகள் செய்முறைகள்பருப்பு மசியல் வகைகள் செய்முறைகள்பொடி வகைகள் செய்முறைகள்பூரி வகைகள் செய்முறைகள்

free computer books in tamil-pdf

இங்கே வலைதளங்களில் காண கிடைக்கும் தமிழ் வழி  E-BOOKS உங்கள் பார்வைக்கு Download செய்ய கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் More Info :https://senthilvayal.wordpress.com கம்ப்யூட்டர் ஹார்டுவேர்வலைவடிவாக்கம்-வெப்டிசைன்மகிழ்ச்சிக்கு வழிஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து- ——————————————————— தமிழில் சி மொழி கற்றுக்கொள்ளதமிழில் ஜாவா மொழி கற்றுக்கொள்ளதமிழில் கணிப்பொறி தொடர்பான விபரங்களை கற்றுக்கொள்ளதமிழில் விண்டோஸ் xp விளக்கங்கள் கற்றுக்கொள்தமிழில் போட்டோ ஷாப்  கற்றுக்கொள்ளஆங்கிலம்  தமிழ் டிஸ்னரிஆங்கில இலக்கணங்கள் எளிய தமிழில்தமிழில் லினக்ஸ்  கற்றுக்கொள்ளதமிழில் லினக்ஸ் பயிற்சிகள்தமிழில்குழந்தைகளின் பெயர் வைக்கதமிழில் ஜோக் படிக்கதமிழ் மருத்துவம்மருத்துவ முலிகைகளின் தமிழ் , அறிவியல் பெயர்கள்தமிழ் எழுத்துகளின் யூனிகோட் வடிவம்கனிணி தொடர்பான வார்த்தைகள் தமிழ் விளக்கம்வேதாந்த ரகசியம்வாஸ்து சாஸ்திரம்

Bar code – id

இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு
என்பது machine readble format யில் இருக்கும்.அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும். நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம்.போலி மருந்துகள் மாதிரி expiry date யை,இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.இனிமேல் பார்கோடை பார்த்து வாங்குங்க . மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal

10 brain damaging habits-plz avoid

1. No Breakfast
People who do not take breakfast are going to have a lower blood sugar level. This leads to an insufficient supply of nutrients to the brain causing brain degeneration. 2. Overeating
It causes hardening of the brain arteries, leading to a decrease in mental power. 3. Smoking
It causes multiple brain shrinkage and may lead to Alzheimer disease. 4. High Sugar Consumption
Too much sugar will interrupt the absorption of proteins and nutrients causing malnutrition and may interfere with brain development. 5. Air Pollution
The brain is the largest oxygen consumer in our body. Inhaling polluted air decreases the supply of oxygen to the brain, bringing about a decrease in brain efficiency. 6 . Sleep Deprivation
Sleep allows our brain to rest. Long term deprivation from sleep will accelerate the death of brain cells. 7. Head Covered While Sleeping
Sleeping with the head covered increases the concentration of carbon dioxide and decrease concentration of oxygen that may lead to b…

பத்துக் கட்டளைகள்…

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது. 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும். 3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள். 4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, …

Moments of 2011 (India and the world)

Image
Moments of 2011 (India and the world)Japan’s killer tsunami, Sikkim’s devastating quake, the Occupy Wall Street movement, and Anna Hazare’s hunger-strike were some of the many significant moments of 2011. Here they are in pictures: On March 11, Japan was hit by one of the largest earthquakes ever recorded. The magnitude-9.0 quake spawned a deadly tsunami that slammed into the small island nation, leaving a huge swath of devastation in its wake.  Gary Kirsten ended his term as India’s coach on a high, guiding India to a historic World Cup triumph, said it was an honour to coach Team India.


Śri Sathya Sai Baba  born as Sathyanarayana Raju (23 November 1926 – 24 April 2011) was an Indian spiritual figure, mystic, philanthropist, and educator. He claimed to be the reincarnation of Sai Baba of Shirdi, a spiritual saint and miracle worker who died in 1918 and whose teachings were an eclectic blend of Hindu and Muslim beliefs, The materializations of vibhuti (holy ash) and other …

tamil siddha,ancient arts

Image
Tamil Siddhar PadalkalNo.Book TitleAuthorDownload1siddhar Padalkalpattinathar2Siddhar PadalkalPathragiriyar3Siddhar PadalkalSivavakkiyar4Siddhar Padalkal Collection - 1Azugani Siddhar, Ramadhevar, Kaduveli Siddhar, Kudambai Siddhar, Sattai Muni, Thirumular, Thiruvalluvar5Siddhar Padalkal Collection - 2Pattanathu Pillaiyar6Siddhar Padalkal Collection - 3Pattanathu Pillaiyar7Siddhar Padalkal Collection - 4Agappey Siddhar, Idaikkattu Siddhar, Kongana Siddhar

Lord Murugan, Skanda, Karthikeya textsNo.Book TitleAuthorDownload1Kanthar Sashti KavasamDevaraya SwamigalKanthar Sashti Kavasam
     (PDF - 114KB | Tamil & English lyrics)

Kanthar Sashti Kavasam
     (MP3 - 19MB | Artist: Soolamangalam Sisters)

Kanthar Sashti Kavasam
     (MP3 - 27MB | Artist: Seerkali Govindarajan)

Kanthar Sashti Kavasam
     (MP3 - 13MB | Artist: Deepika & Geetha)

Kanthar Sashti Kavasam��������������…