Posts

HAPPY MAY 1

Image
வியர்வைகளால்  முத்துக்கள் செய்பவனே....
நீவிதைத்த வியார்வைகள் தான்
கல்லாய் கிடந்த இந்த பூமிப்பந்து கர்ப்பம் தரித்து உயிர்பிடித்திருக்கிறது...!

நீ... உடல் முழுவதும் சகதிகள் பூசி
இந்த உலகத்தை மிளிர செய்தவன்...
நீ... அழுக்காகி அழுக்காகியே
அர்த்தப்பட்டவன... 

நீ உயர்த்திய தோளில் உயர்ந்திருக்கிறது சமுதாயம்...
நீ உயர்த்திய கரங்களில்
பூத்திருக்கிறது மறுமலர்ச்சி.... 

ன் வியர்வை நாற்றம்...
அது உன் நாட்டை மணக்கச்செய்யும்
மகரந்தத்துகள்கள்...

ன் கரங்களில் ஏற்படும் வடுக்கள்
அது தேசத்தை அறிமுகப்படுத்த வாய்க்கும்
அடையாளங்கள்....

நீ ஏர்பிடித்திருக்காவிட்டால்
என் பூமித்தாய்க்கு பட்டாடை ஏது...
நீ பாறைகளை உடைத்திருக்காவிட்டால்
இந்த பூமிச்சக்கரத்தின் அச்சுக்கள்
ஆயுள் இழந்திருக்கும்...!

கைத்தொலைபேசிக்கான இணையதளத்தை வடிவமைப்பதற்கு

கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு தகுந்தபடி அழகான மொபைல் வலைதளம் ஓன்லைன் மூலம் எந்த மென்பொருள் துணையுமின்றி இலவசமாக உருவாக்கலாம்.
கைத்தொலைபேசிகள் பெருகிவிட்ட இக்காலகட்டத்தில் என்று ஆகிவிட்டது. மின்னஞ்சல் படிப்பதில் தொடங்கி இணையதளம் பார்ப்பது வரை அத்தனையும் நாம் கைத்தொலைபேசி மூலமே செய்யலாம்.
இப்படி இருக்கும் போது நம் இணையதளமும் கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்படி உருவாக்கினால் எப்படி இருக்கும். நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்று Go mobile என்ற பொத்தானை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச கணக்கு உருவாக்கி கொண்டு இணையதளம் உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட Template(ஏற்கனவே வடிவமைப்பு செய்யப்பட்டவை) பல இருக்கிறது.
இதிலிருந்து நமக்கு வேண்டிய டிசைனை தேர்ந்தெடுத்து எளிதாக சில சொடுக்குகளின் மூலம் மாற்ற வேண்டியதை மாற்றி புதிதாக ஒரு மொபைல் இணையதளம் உருவாக்கலாம்.
எல்லாம் உருவாக்கிய பின் அவர்களே ஒரு இணையதள முகவரியும் கொடுக்கின்றனர். நாம் நம் தளத்தில் கைத்தொலைபேசி வாசகர்கள் இங்கே சொடுக்க என்று ஒரு இணைப்பு வைத்து அந்த முகவரியை கொடுக்கலாம், கைத்தொலைபேசியிலும் நம்…

GSM தொழில்நுட்பம் பற்றிய சில தகவல்கள்

அயல் நாடுகளில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் மொபைல் சிஸ்டம் தான் GSM.
இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ என்ற மொபைல் சிஸ்டம் இதைக் காட்டிலும் சிறப்பான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும் ஜி.எஸ்.எம் சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது.
இந்தியாவில் இரண்டு சிஸ்டங் களும் இயங்குகின்றன. ஆனால் ஜி.எஸ்.எம் வகை தான் அதிக வாடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் கொண்டுள்ளது.
Line In: கணணி அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஓடியோ சாதனத்தை இணைக்கும் வழி.
Back up Domain Controller: விண்டோஸ் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கணணிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கணணிகள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பக் அப் ஆகச் செயல்படுவதனை இது குறிக்கிறது.
அவை செயல் இழக்கையில் இந்த பக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன.
இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
Event Handler: ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்தி விடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறதல்லவா. …

GPRS பற்றிய சில தகவல்கள்

GPRS  என்பது ஒரு மொபைல் டேட்டா சர்வீஸ் வகையாகும். 2ஜி மற்றும் 3ஜி வகை நெட்வொர்க் இணைப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது.
தகவல் பரிமாற்றத்தினை இது தருகிறது. நொடிக்கு 56 கிலோ பிட்ஸ் முதல் 114 கிலோ பிட்ஸ் வரையிலான வேகத்தில் இதன் மூலம் தகவல்களினைப் பெறலாம்
தகவல்களினைப் பெற உங்கள் மொபைல் போனில் உள்ள பிரவுசர் இணைய இணைப்பில் இருக்க வேண்டும்.
EDGE Enhanced Data rates for GSM Evolution: இதனை எட்ஜ் எனவும் அழைக்கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஜி.பி.ஆர்.எஸ் வகையினைக் காட்டிலும் சற்று மேம்பட்டதாகும்.
அதனைக் காட்டிலும் சற்று வேகம் அதிகமான பிரவுசிங் மற்றும் தகவல் பரிமாற்றத்தைத் தரும்.

AGPS பற்றிய சில தகவல்கள்

AGPS என்பது Assisted Global Positioning System என்பதாகும்.  இந்த வசதியானது கைத்தொலைபேசியில் தகவல்களை பெறுவதற்கு பயன்படுகிறது.
உங்கள் கைத்தொலைபேசியில் இணைய இணைப்பு வசதி இருந்து, அதனை இயக்கும் வசதியை உங்களுக்கு போனுக்கு இணைப்பு தரும் நிறுவனத்திடம் நீங்கள் பெற்றிருந்து அதனை இயக்கினால் சாட்டலைட் டிலிருந்து நிறுவனத்தின் சர்வர் வழியே உங்கள் கைத்தொலைபேசியில் தகவல்களைப் பெறலாம்.
இணையப் பக்கங்களைப் பார்வையிடலாம். ஜி.பி.எஸ். வசதி கொண்ட கைத்தொலைபேசிகளில் இந்த AGPS உதவி இல்லாமல் தகவல்களை பெறலாம். ஆனால் அதற்கு நேரம் மிக மிக அதிகமாகும்.
அந்த சிரமத்தை இந்த தொழில் நுட்பம் குறைக்கிறது. ஆனால் உங்கள் கைத்தொலைபேசியில் இன்டர்நெட் தொடர்பு வசதி இருப்பது கட்டாயமாகும்.

இணைய இணைப்பு அற்ற நிலையில்(offline) விக்கிபீடி​யாவை பயன்படுத்தலாம்

அறிவுத்தேடலின் பிரமாண்டமான பொக்கிஸமாகவும், திறந்த வெளியாகவும் காணப்படும் விக்கிபீடியா தளமானது உலகில் அறிவுத்தேடலுடன் பரந்து வாழும் மக்கள் மத்தியில் மிக பிரபல்யம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.
இதனால் அலெக்ஸா வரிசைப்படுத்தலிலும் மிகச்சிறந்த இடத்தில் காணப்படுகின்றது. இத்தளத்தில் ஆங்கிலத்தில் மட்டும் 3.8 மில்லியனுக்கும் அதிகமான கட்டுரைகள் காணப்படுவதும் ஒரு சிறப்பம்சமாகும்.
எனினும் இப்பயனுள்ள தளத்தை இணைய இணைப்பு காணப்படுகின்ற சந்தர்ப்பங்களிலேயே பயன்படுத்தக்கூடியவாறு காணப்பட்டமை ஒரு எதிர் விளைவாகவே காணப்பட்டது. இதனால் இணைய வசதியற்ற பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைய முடியாத சூழ்நிலை காணப்பட்டது.
ஆனால் தற்போது அதற்கும் தீர்வு கிடைத்துவிட்து. அதாவது இணைய இணைப்பு அற்ற நிலையில் விண்டோஸ் இயங்குதளத்தை கொண்ட உங்கள் செல்போன்களிலும் இதற்கான மென்பொருளை நிறுவி பயன்படுத்த முடியும்.
"பொக்கட் விக்கிபீடியா" என அழைக்கப்படும் இந்த மென்பொருளில் 24,000 படங்கள் காணப்படுவதுடன் 14 மில்லியன் வரையிலான கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. 175MB அளவைக்கொண்ட இந்த மென்பொருளானது விண்டோஸ், லினக்ஸ் இயங்குதளங்களி…

புற்றுநோயை கட்டுப்படுத்தும் திராட்சை

திராட்சை விதைகளில் உள்ள சத்துகள், புற்றுநோய் கிருமிகளை விரட்டி நோயை கட்டுப்படுத்துகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
உடலில் உள்ள மற்ற ஆரோக்கியமான செல்களை இவை பாதிக்காது என்பது கூடுதல் சிறப்பு. கொலராடோ பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சி பிரிவினர் இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையில் இணைந்து புற்றுநோய்க்கான தீர்வு குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதில்தான் திராட்சை விதையின் மகத்துவம் தெரியவந்துள்ளது. ஆய்வு குறித்து ராஜேஷ் கூறியதாவது: உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தீர்வுக்கான ஆராய்ச்சிகளும் தொடர்கின்றன.
சமீபத்தில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் திராட்சை விதையில் உள்ள மூலப்பொருட்கள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது தெரியவந்துள்ளது. பொதுவாக அனைத்து வகையான புற்றுநோய் கிருமிகளுமே மிக வேகமாக பரவக்கூடியவை.
இவற்றை கட்டுப்படுத்த கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சை முறைகள் உள்ளன. சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் கிருமிகள் பன்மடங்கு பெருகி உயிர்க்கொல்லியாக மாறும் ஆபத்து உள்ளது. கீமோதெரபி உட்பட முறையில்…