short key

வேர்ட் தொகுப்பில் ஆல்ட் கீயுடன் இணைந்த சில ஷார்ட் கட் கீகள்
Alt O, B
தேர்ந்தெடுக்கப்பட்ட பாராக்களில் அட்டவணை செல்களில் மற்றும் படங்களில், பார்டர்களையும், ஷேடிங்குகளையும் மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம்.
Alt O, E
ஆவணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களில் சிறிய எழுத்தைப் பெரிய எழுத்தாகவும் பெரிய எழுத்துக்களை சிறிய எழுத்துக்களாகவும் மாற்ற இந்த கீகள் பயன்படுகின்றன.
Alt O, C
காலம், செக்ஷன் என்றழைக்கப் படுகிற பிரிவுகளை ஏற்படுத்த இந்த கீகளை முதலில் அழுத்தலாம். column format என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
Alt O, D
ஆவணத்தில் பத்தி ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ள முதல் எழுத்தைப் பெரிதாக, பெரிய எழுத்தாக மாற்ற இந்த கீகளைப் பயன்படுத்தலாம். ஆல்ட் ஓ மற்றும் டி அழுத்தியவுடன் ட்ராப் கேப் என்ற சிறிய விண்டோ கிடைக்கும். இதில் முதல் எழுத்து எப்படி அமைய வேண்டும் என மூன்று ஆப்ஷன்கள் கிடைக்கும். நாம் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் பத்தியின் முதல் எழுத்து மாற்றப்படும்.


Comments

Popular posts from this blog

free computer books in tamil-pdf

Moments of 2011 (India and the world)